Tuesday, September 24, 2013

பான் கார்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்...

            நீங்கள் இந்திய பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராக இருந்தாலும் சரி, இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ உங்களிடம் கண்டிப்பாக பான்(PAN) கார்டு இருக்க வேண்டும்.

பான் என்றால் என்ன?
        பான்(PAN) என்பதன் விரிவாக்கம் "பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர்" (நிரந்தர கணக்கு எண்). இது ஒரு 10 இலக்கு வரிவடிவ எண் குறியீடு. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது. ஒவ்வொரு தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் முதலியவற்றுக்கு ஒரு தனித்தன்மையான எண் வழங்கப்படும். இந்த என்னை பற்றி விரிவாக பார்ப்போம்.

பான் என்பது ஒரு நிரந்தரமான எண்ணாகும். உங்கள் முகவரி மாறினாலோ அல்லது நீங்கள் வாழும் மாநிலத்தை மாற்றினாலோ இதில் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

பான் கார்டு வழங்கும் முக்கிய காரணம்? உலகளாவிய அடையாளத்தை ஏற்படுத்தவே. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒரு மையத்தில் இணைத்து கண்காணிக்கலாம். இதனை கண்காணிப்பதால் இவை மறைமுகமாக வரி ஏய்ப்பை தடுக்கிறது.


இந்த எண் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அளிக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு நிகரானவையாகும்.


பான் பற்றிய புனைகதை:
           பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும்.

பான் கார்டிற்கு விண்ணப்பிக்க:
         பான் கார்டு வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு வயது, குடியுரிமை என்று எந்த வரம்பும் கிடையாது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு கூட விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையெழுத்திட வேண்டும்.

புதிய பான்:
             விண்ணப்பதாரர் இதற்கு முன் பான் கார்டிற்கு விண்ணப்பித்ததில்லை என்றாலும், அவருக்கு ஏற்கனவே பான் ஒதுக்கப்படாமல் இருந்தாலும் சரி, அவர் வருமான வரித்துறை (ITD) இணையதளத்திற்கு செல்லலாம். அவர்களுக்கு பான் ஒதுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதே முதல் படி.

ஒரு வேளை அவருக்கு பான் ஒதுக்கப்படாமல் இருந்தால் கீழ்கண்ட இணையதளத்தில் போய் விண்ணப்பிக்கலாம். அங்கயே உங்கள் விண்ணப்பத்தின் இருப்பு நிலையையும் அறிந்துக் கொள்ளலாம். அந்த இணையதளங்கள்:

o    யூடிய் பான்(UTI) கார்டு விண்ணப்ப படிவம்
o    என்ஸ்டிஎல்(NSDL) விண்ணப்ப படிவம் - பான்

நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் டின்-பான்(TIN-PAN) மையங்கள், என்ஸ்டிஎல் டின்(NSDL-TIN) அல்லது யூடிய் பான்(UTI PAN) விண்ணப்ப மையத்தை அனுகலாம்.

புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து குறைந்தது இரண்டு அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்: - 

  1. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
  2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன பட்டம்
  3. கடன் அட்டை
  4. வங்கி அறிக்கை
  5. ரேஷன் கார்டு
  6. ஓட்டுனர் உரிமம்
  7. வாக்காளர் அடையாள அட்டை
  8. பாஸ்போர்ட்

பான் கார்டின் மறு அச்சடிப்பு:

              உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, பான் கார்டை பெறுவதற்கு விண்ணப்பத்தை உபயோகிக்க வேண்டும். இந்த புது பான் கார்டில் அதே பான் எண் தான் இருக்கும். என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ணப்பிக்கலாம். என்ஸடிஎல் மற்றும் யூடிய் இணையதளங்களில் உங்கள் பான் எண்ணை தேடி கண்டுப்பிடிக்கலாம்.

பான் எண்ணுடைய அமைப்பு: 
           பான் எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு எண்ணும் தனித்தன்மையுடன் விளங்கும். இது போனெடிக் பான் (PAN) எண் உருவாக உதவி புரியும்:
வரி கட்டுபவரின் முழுப்பெயர் 
பிறந்த தேதி/நிறுவனம் தோன்றிய தேதி
ஸ்டேடஸ் 
தனி நபர் என்றால் பாலினம் 
தனி நபர் என்றால் தந்தையின் பெயர் (திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி). 

பான் கார்டு வழங்கப்பட்ட தேதி பான் கார்டில் உங்கள் புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

10 இலக்கு வரிவடிவ எண்ணின் வரிசை
பான் எண்ணின் 10 இலக்கு எண்ணின் வரிசையத்தை பற்றி விலாவரியாக பார்ப்போமா: 
1.முதல் ஐந்து எழுத்துக்கள் முக்கியமானவை. அவை வரிவடிவ எண்                       அமைப்போடு இருக்கும். 
2.அவைகளில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்திருக்கும்.        இந்த வரிசையம் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். 
3. நான்காவது எழுத்து விண்ணப்பதாரரை பொறுத்து தீர்மானிக்கப்படும்: 
     C - குழுமம் (கம்பெனி) 
     P - தனி நபர் H - ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) 
     F - நிறுவனம் 
     A - தனி நபர்களின் இணக்கம் (AOP) 
     T - அறக்கட்டளை 
     B - பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) 
     L - லோக்கல் அதாரிட்டி 
     J - செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் 
     G - அரசாங்கம் 
        (உதாரணம் - கம்பெனி = AAACA; செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை           சார்ந்த நபர் = AAAJA; HUF = AAAHA;)
4. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்: 
     a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது 
     b)மற்ற அனைவருக்கும் தங்களின் நிறுவனம், டிரஸ்ட், குழுமம்                                 போன்றவற்றின் முதல் எழுத்து.
        (உதாரணத்திற்கு - லிசா சனமொலு [தனிநபர்] = AAAPC4444A;
         லிசா சனமொலு [HUF] = AAAHL4444A;
         பொது நிறுவனம் = AAAFG4444A) 
5. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய               எண்கள். 
6. கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு இலக்கம்

புதிய போனெடிக் பான் (PPAN):
                 புதிய போனெடிக் பான் (PPAN)-ஆல் ஒரே பெயரைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பான்-னிற்கு மேல் ஒதுக்கப்படும் தவறு நடக்காது. பொருந்தும் பான் கார்டு கண்டுபிடிக்கப்பட்டால், பயனாளிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும். இரட்டிப்பான பான் கார்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும். இந்த நேரத்தில் சரிப்பார்க்கும் அதிகாரி இந்த பான் கார்டு இரட்டிப்பை நிராகரித்தால் தான் புதிய பான் ஒடுக்கப்படும். இந்த புதிய அமைப்பின் படி ஒரு தனித்துவம் பெற்ற பான் எண்ணை வரி கட்டுபவர்கள் 17 கோடி பேருக்கு ஒதுக்கலாம்.

No comments:

Post a Comment