GATE - 2014 தேர்வுக்கு தயாராகுங்கள்...
IIT., IISC. உள்பட நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வு கேட். இந்தத் தேர்வின் அடிப்படியில் பொதுத் துறை நிறுவனங்களும் பொறியியல் தொழில்நுட்பப் பட்டதாரிகளை வேலைக்குச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
தமிழ்நாட்டில் 560க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதனால், தமிழகத்தில் மட்டும் சுமார் 2லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்புகளைப் படிக்கிறார்கள். என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, முதுநிலை என்ஜினீயரிங் பட்டப் படிப்புகளைப் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பொறியியல், தொழில்நுட்ப முதுநிலைப் படிப்புகளில் சேர TANCET என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மூலம் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேரலாம்.
இதேபோல, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) உள்பட நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கேட் (Graduate Aptitude Test in Engineering - GATE). சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் Ph.D படிப்புக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஐஐஎஸ்சி, ஏழு ஐஐடிக்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. கேட் தேர்வை எழுதி தகுதி பெறும் மாணவர்கள் முதுநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் வழங்கும் உதவித் தொகையைப் பெற முடியும். 2008ம் ஆண்டில் கேட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1.8லட்சம். இந்த ஆண்டில் கேட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7.7லட்சம். அந்த அளவுக்கு கேட் தேர்வு முக்கியத்துவம் பெற்று வருகிறது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் செயில் போன்ற பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் இத்தேர்வை கருத்தில் கொள்கின்றன.
சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றன. நேர்முகத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும் நிலை இருந்தால், கேட் தேர்வுகளுக்கு 70சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு அல்லது படிப்பு மதிப்பெண்களுக்கு 30சதவீத மதிப்பெண்களும் ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் ஸ்காலர்ஷிப் குறித்த விவரங்களை மாணவர்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனங்களில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கேட் நுழைவுத் தேர்வை யார் எழுதலாம்?
என்ஜினீயரிங், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ச்சர் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல், கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்களும் அந்தப் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு அல்லது டியூயல் டிகிரி படிப்பை முடித்த மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். ஏஎம்ஐஇ, ஏஎம்ஐசிஇ படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி படிப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்ப நான்கு ஆண்டு முதுநிலைப் படிப்புகளைப் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான விரிவான தகுதி விவரங்களை கேட் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு கேட் தேர்வில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங், அக்ரிக்கல்ச்சுரல் என்ஜினீயரிங், ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் பிளானிங், பயோ டெக்னாலஜி, சிவில் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினியரிங், கெமிஸ்ட்ரி, ஜியாலஜி அண்ட் ஜியோபிசிக்ஸ், கணிதம், மைனிங் என்ஜினியரிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், இயற்பியல், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் அண்ட் ஃபைபர் சயின்ஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், லைஃப் சயின்சஸ் ஆகிய 15பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமெண்டேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், புரடக்ஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் ஆகியவை எழுத்துத் தேர்வுகளாக நடைபெறும்.
கேட் மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் புதிய பார்முலா பயன்படுத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வு முறை எப்படி இருக்கும்?
அனைத்துத் தாள்களிலும் ஜெனரல் ஆப்டிட்யூட் (Language and Analytical Skills) குறித்த சில கேள்விகள் இருக்கும். என்ஜினீயரிங் சயின்சஸ் (XE) பிரிவுக்கான தாளில் என்ஜினீயரிங் மேத்தமேட்டிக்ஸ் பாடக் கேள்வித்தாளைக் கட்டாயமாக எழுத வேண்டும். புளூயிட் மெக்கானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், சாலிட் மெக்கானிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ், பாலிமர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், ஃபுட் டெக்னலாஜி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். லைஃப் சயின்ஸ் (XL)எக்ஸ்எல் பிரிவுக்கான தேர்வுத் தாளில் வேதியியல் பாடக் கேள்வித்தாளை கட்டாயமாக எழுத வேண்டும். அத்துடன் ஜெனரல் ஆப்பிட்டியூட் கேள்விகளும் இருக்கும். பயோ கெமிஸ்ட்ரி, தாவரவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், ஃபுட் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து இரண்டு பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்து அந்தப் பாடக் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், புரடக்ஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் மட்டுமே எழுத்துத் தேர்வுகள். மற்ற தேர்வுகளை ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். இத்தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் 65கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 100மதிப்பெண்கள். ஒவ்வொரு கேட் தேர்விலும் பொதுத் திறனறிவு வினாக்களும் இருக்கும். இதற்கு 15மதிப்பெண்கள் உண்டு. இத்தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த கேட் மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதற்குள் இந்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி உரிய கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
கேட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கேட் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். புகைப்படம், கையெழுத்து, உரிய ஆவணங்களையும் இணையதளத்தின் மூலம் அனுப்ப வேண்டும். நெட்பேங்கிங் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். அல்லது கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கியில் சலான் மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு ஆண் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆண் மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.600. மாணவிகள் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை.அந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து புகைப்படத்தை இணைத்து உரிய ஆவணங்களுடன் கேட் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடத் திட்டம் குறித்து இணைய தளத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
கேட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, சிதம்பரம், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதலாம். சென்னை, சிதம்பரம், கோவை, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வை எழுதலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை பிரிண்ட் அவுட் எடுத்து மண்டல கேட் அலுவலகத்தில் அக்டோபர் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே இந்தத் தேர்வுக்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கி விட வேண்டும். தேர்வுப் பாடத்திட்டத்தைப் பார்த்து, அதில் நன்கு பயிற்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க தனியார் கோச்சிங் மையங்கள் உள்ளன. அதில் சேர்ந்து பயிற்சி பெறலாம், கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்கலாம்.
ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள், கம்ப்யூட்டர் மூலம் அத்தேர்வு எழுதுவதில் நன்கு பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். பிளஸ் டூ முடித்து விட்டு ஐஐடியில் சேர்ந்து படிக்க நினைத்து அதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு கேட் தேர்வு மற்றொரு வாய்ப்பு. இத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் ஐஐடி மட்டுமல்ல ஐஐஎஸ்சி, என்ஐடி, ஐஐஐடி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேரலாம். அத்துடன் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும். கேட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட தனி இடங்கள் உள்ளன.
பொதுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பைப் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும். முதுநிலை பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளைப் படித்த மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.
முதுநிலைப் பொறியியல், தொழில் நுட்பப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் ஆர்வமிக்க மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
முக்கிய விவரங்கள் :
Application Fee:
* Candidates have to apply ONLINE
* Rs. 1500 for General / OBC male candidates
* Rs. 750 forWomen Candidates
* Rs. 1500 for General / OBC other candidates
* Rs. 750 for SC / ST / PD category candidates
* The application paid either ONLINE or through a bank challan via SBI or Syndicate Bank
Application Deadlines:
* COMMENCEMENT OF ONLINE APPLICATION : 2nd September 2013(Monday)
* LAST DATE FOR: Submission of Application (website closure): 3rd October 2013(Thursday)
* Receipt of hard copy application with supporting documents at respective GATE office: 10th October 2013 (Thursday)
Dates of Examination :
On Saturdays and Sundays between 1st February 2014 and 2nd March 2014. The exact schedule wi1l be given on the GATE 2014 website.
விவரங்களுக்கு: